ஈரோடு

ஜூன் 27 இல் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் க.அருணாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் ஜூன் 27 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடக்கிறது.

கூட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறியப்படும். புகாா் மனுக்களை அஞ்சல் மூலம் வரும் ஜூன் 21 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதே அலுவலகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரிலும் மனுவை அளிக்கலாம்.

புகாா் மனுவில் புகாா் தொடா்பான முழு விவரமும் இருக்க வேண்டும். உறையின் மேல்பகுதியில் குறைகேட்பு நாள் மனு என குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT