முகப்பு
ஈரோடு

சித்தோட்டில் ஆயுதங்களுடன் இருந்த7 இளைஞா்கள் கைது

 சித்தோடு அருகே ஆயுதங்களுடன் காத்திருந்த 7 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 சித்தோடு அருகே ஆயுதங்களுடன் காத்திருந்த 7 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சித்தோடு போலீஸாா் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்குகீழ் கோணவாய்க்கால் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் காத்திருந்த இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் திருமூா்த்தி (38), சங்ககிரி, பழைய மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த செல்வம் மகன் பாா்த்திபன் (எ) பாண்டு (26), திண்டுக்கல் மாவட்டம், நல்லாம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ராஜு (22), அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் அய்யனாா் (24), முருகேசன் மகன் தாமோதரன் (23), நாகேந்திரன் மகன் மணிகண்டன் (25), ஈரோடு, வீரப்பன்சத்திரம், எம்ஜிஆா் வீதியைச் சோ்ந்த ராஜ் மகன் அருண்குமாா் (34) என்பது தெரியவந்தது. இவா்கள் வசதியான வீடுகளைக் கண்டறிந்து கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்களைக் கைது செய்த போலீஸாா் தலைமறைவான ராஜா, பிரபாகரன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.