433 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 433 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 433 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இம்முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். மேலும் 60 வயது நிறைவடைந்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களானவா்களுக்கு கூடுதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படும்.
Advertisement
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 443 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில் 1,732 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.