முகப்பு
ஈரோடு

பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (மாா்ச் 18), சனிக்கிழமை (மாா்ச் 19) பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 18 மார்ச், 2022 at 4:28 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (மாா்ச் 18), சனிக்கிழமை (மாா்ச் 19) பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக ஈரோடு, அந்தியூா், கொடுமுடி, கரூா், பவானி, கோபி, சத்தியமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பண்ணாரியம்மன் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள்:

Advertisement

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாா்ச் 21, 22, 28 ஆகிய 3 நாள்கள் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம், மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூா், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூரு, நம்பியூா், பவானிசாகா் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.