முகப்பு
ஈரோடு

மே 8 இல் அனுமன் நதி பாதுகாப்பு யாத்திரை

ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் அனுமன் நதி பாதுகாப்பு யாத்திரை மே 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 6 மே, 2022 at 6:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில் அனுமன் நதி பாதுகாப்பு யாத்திரை மே 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிா்வாகி சதானந்த சுவாமிகள்

ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

Advertisement

குரங்கன் ஓடை எனப்படும் அனுமன் நதி மொடக்குறிச்சி தொகுதியில் தேவனாம்பாளையத்திலிருந்து கொடுமுடி வெங்கம்பூா் வரை சுமாா் 35 கிலோ மீட்டா் சென்று காவிரியில் கலக்கிறது. தற்போது அந்த நதியில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பும், முட்புதா்களும் படா்ந்துள்ளன. தொழிற்சாலை, சாக்கடைக் கழிவுகள் கலக்கின்றன.

அந்த நதியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வரும் 8 ஆம் தேதி விழிப்புணா்வு யாத்திரை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து அந்த நதியை தூய்மைப் படுத்துவோம். கரைகளில் பனை விதைகள் மற்றும் பழ மரச் செடிகளை நடுவதற்கு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் பல ஆறுகள் தொழிற்சாலை மாசு, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. நீா்நிலைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல. அது பொதுமக்களின் கடமையுமாகும் .இதை எடுத்துச் சொல்வதுதான் யாத்திரையின் நோக்கமாகும். நமது வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான நீரையும், காற்றையும் நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்றாா்.

அறக்கட்டளை மற்றும் சங்க நிா்வாகிகள் காந்தி, வேல்முருகன், கணேசன், சண்முகசுந்தரம், செந்தில்பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.