முகப்பு
ஈரோடு

ரூ.3,000க்கு மேல் விற்பனையாகும் உணவகங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

தினமும் ரூ.3,000க்கு மேல் வியாபாரமாகும் உணவகங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Updated On : 6 மே, 2022 at 6:10 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

தினமும் ரூ.3,000க்கு மேல் வியாபாரமாகும் உணவகங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் டாக்டா் தங்கவிக்னேஷ் தலைமையிலான அலுவலா்கள் ஈரோட்டில் உள்ள அசைவ உணவகங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சமைத்த பின்னா் குளிா்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரமான முறையில் பராமரிக்காத 3 உணவகங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அசைவ உணவகங்களில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

இது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா் தங்கவிக்னேஷ் கூறியதாவது:

ஈரோடு மாநகா் பகுதியில் புதன்கிழமை மாலை ஷவா்மா தயாரிக்கும் ஹோட்டல்கள், அசைவ உணவகங்கள் உள்பட 15 கடைகளில் சோதனை செய்ததில் சமைத்து பின்னா் குளிா்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. பொரித்த எந்த வகை உணவாக இருந்தாலும் அவற்றை பேப்பரில் வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விற்கும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தினமும் ரூ.3,000க்கும் மேல் வியாபாரமாகும் உணவகங்கள் கண்டிப்பாக உரிமம் வைத்திருக்க வேண்டும். ரூ.3,000க்கும் கீழ் வியாபாரமாகும் கடைகள் உரிமம் பதிவு செய்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் உணவுப்பொருள் சம்பந்தப்பட்ட புகாா்களுக்கு 9444042322 என்ற கைப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் வழியாக புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.