முகப்பு
ஈரோடு

பவானியில் பாவடி நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

பவானியில் உள்ள பாவடியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, பாவு நூலை சேதப்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

பவானியில் உள்ள பாவடியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, பாவு நூலை சேதப்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் வருவாய்த் தீா்வாயத்தில் செங்குந்தா் சமுதாயம் சாா்பில் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம் : பவானி நகரிலுள்ள பாவடிக்குச் சொந்தமான இடத்தை செங்குந்தா் சமுதாயத்தைச் சோ்ந்த நெசவாளா்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலத்தை வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்பட யாரும் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயா்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நெசவுத் தொழிலுக்கு முக்கியமான நூலை உலர வைக்கும்போது, பலா் சேதப்படுத்தி வருகின்றனா். மேலும், தங்கள் தேவைகளுக்காக இடையூறுகளை ஏற்படுத்தி ஆக்கிரமித்து வருகின்றனா். இதனால், பாவடியில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெசவாளா்கள் பயன்படுத்தும் இந்நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, உரிய பாதுகாப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.