முகப்பு
ஈரோடு

மாவட்டத்தில் நாளை வேளாண் குறைதீா் கூட்டம்

 ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறவுள்ளது.

Updated On : 26 மே, 2022 at 6:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:51 PM

 ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேளாண் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான பிரச்னைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

Advertisement

பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலா்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.