ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர்: ஹர்பஜன் சிங்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஆஷிஷ் நெஹ்ரா ஒருவரால் மட்டுமே எந்தவொரு இடத்திலும், எப்போதும் சூழலை மிகவும் இயல்பாக வைத்திருக்க முடியும். அவர் எங்கு சென்றாலும், அவரைச் சுற்றி இருக்கும் அனைவரையும் எந்தவொரு அழுத்தமும் இல்லாதவாறு உணர வைப்பார். அவர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் போன்றவர். அவர் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க மாட்டார்.
போட்டி முழுவதும் ஏதேனும் ஒரு வீரரிடம் பேசிக் கொண்டே இருப்பார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள வீரர்களிடம் அவர் தொடர்ச்சியாக பேசி, அந்த அணியில் நல்ல பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆட்டத்தை மிகவும் நன்றாக புரிந்துகொள்ள கூடியவர் நெஹ்ரா. அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார்.
Former Indian cricketer Harbhajan Singh has praised Gujarat Titans coach Ashish Nehra, stating that he is like a football coach.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.