FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலையில்லை: பயிற்சியாளர்

ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்க்கும் என அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 18 ஜூலை 2026, 8:25 pm IST
ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ
பகிர்:

ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்க்கும் என அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 19) லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமனில் உள்ளதால், நாளை நடைபெறும் கடைசிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. முதல் போட்டியில் 11 ரன்களும், இரண்டாவது போட்டியில் 26 ரன்களும் எடுத்தார். அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளதால், ரோஹித் சர்மா சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவரது ஆட்டத்தின் அடிப்படையிலேயே உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் அனுபவம் மற்றும் அதிரடியான ஆட்டம் அணிக்கு வலுசேர்க்கும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: புதிய பந்தில் சிறப்பாக விளையாடுவது கடினம். அதனை இந்தத் தொடர் முழுவதும் பார்க்கிறோம். பந்து நன்றாக நகர்கிறது. அதனால் புதிய பந்தில் விளையாடுவது அவ்வளவு எளிது கிடையாது. இந்த விஷயத்துக்கு ரோஹித் சர்மா கவனம் கொடுப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. கடந்த காலங்களில் இதனை அவர் செய்துள்ளார். அவரது அனுபவம் மற்றும் பொறுமை அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்ப்பதாக அமையும். அதனால், அவரது பேட்டிங் குறித்து எந்தவொரு கவலையும் எங்களுக்கு இல்லை என்றார்.

summary

Team bowling coach Morne Morkel has stated that Rohit Sharma's aggressive style of play will strengthen the Indian team's batting lineup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments