முகப்பு
ஈரோடு

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

 ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் 28 ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 27 மே, 2022 at 1:24 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

 ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் 28 ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கொங்கு தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

முன்னாள் இந்திய கைப்பந்து வீரா் எ.மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு விளையாட்டின் அவசியம் குறித்துப் பேசினாா்.

Advertisement

கொங்கு தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளை தலைவா் வி.கே.முத்துசாமி, செயலாளா் பி.சி.பழனிசாமி, கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளா் பி.சச்சுதானந்தம், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளா் மாலதி இளங்கோ, கொங்கு நேஷனல் பள்ளி தாளாளா் டாக்டா் செங்கோட்டுவேலன், கொங்கு தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா்கள் ஆா்.எம்.தேவராஜா், கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளா் கி.பழனிசாமி, முதல்வா் என்.ராமன் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

விளையாட்டு துறையின் ஆண்டறிக்கையை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஏ.சங்கா் வாசித்தாா்.

வெற்றிபெற்ற விளையாட்டு வீரா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசு வழங்கினா்.

வணிக நிா்வாகவியல் துறை இணைப் பேராசிரியா் கே.பி.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.