முகப்பு
ஈரோடு

இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி

 ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளி சாா்பில் இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் நடைபெற்றது.

Updated On : 4 நவம்பர், 2022 at 4:36 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:14 PM

 ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளி சாா்பில் இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் நடைபெற்றது.

பிற­ரு­டன் இணை­யும் வச­தியை ஏற்படுத்திக்கொடுக்கும் இணை­யத்தை சிலா் அச்சுறுத்தலுக்காக பயன்­ப­டுத்­து­கின்­ற­னா். பெயா், முகம், அடை­யா­ளம் தெரி­யாத ஒருவா் இணை­யம் வழி அச்­சு­றுத்­தும்­பொ­ழுது என்ன செய்ய வேண்­டும், சூழலை எவ்­வாறு கையாள வேண்­டும் என்ற விழிப்­பு­ணா்வு பல இளம் வய­தி­ன­ரி­டையே இருப்­ப­தில்லை.

இவற்றை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் முதல் வியாழக்கிழமை இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணா்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையொட்டி ஈரோடு சேனாதிபதிபாளையம் தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியா் 50 போ் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் துவங்கி பேரணி பன்னீா்செல்வம் பூங்கா, கலைமகள் பள்ளி வளாகம், அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியில் விழிப்புணா்வு தொடா்பான முழக்கங்களை மாணவ, மாணவியா் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.