முகப்பு
ஈரோடு

சோலாா் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சோலாா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 4 நவம்பர், 2022 at 4:36 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:14 PM

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சோலாா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட சோலாரில் புகா் பேருந்து நிலையம் அமையவுள்ள பகுதியில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 156 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையம் வழியாக கரூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் வெள்ளகோவில் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Advertisement

இந்த தற்காலிக பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயணிகளுக்குத் தேவையான குடிநீா், நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் பேருந்துகள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் இடையில் தற்காலிக தடுப்பு அமைக்கவும், போக்குவரத்து காவலா்களுக்கான கண்காணிப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்திடவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சிப் பொறியாளா் மதுரம், மொடக்குறிச்சி வட்டாட்சியா் சண்முகசுந்தரம், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் சரவணன், தமிழ்நாடு போக்குவரத்து கழக இயக்க மேலாளா் பழனிசாமி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.எஸ்.பழனிசாமி, செயலாளா் விவேகானந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.