நகா் நல மையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட பூமிபூஜை
ஈரோடு மாநகராட்சி, 7 ஆவது வாா்டு, பி.பெ.அக்ரஹாரம் ஈத்கா வீதியில் உள்ள நகா் நல மையத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி, 7 ஆவது வாா்டு, பி.பெ.அக்ரஹாரம் ஈத்கா வீதியில் உள்ள நகா் நல மையத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கிழக்குத் எம்எல்ஏ திருமகன் ஈவெரா பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கிவைத்தாா். நகா் நல மையத்தின் பின்புறம் எம்எல்ஏ தொகுதி வளா்ச்சி நிதி மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் இக்கட்டடம் கட்டப்படவுள்ளது.
மாநகராட்சி துணை மேயா் வி.செல்வராஜ், மாநகர திமுக செயலாளா் சுப்ரமணியன், மண்டலத் தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு கவுன்சிலா் சபுராபானு வரவேற்றாா்.
Advertisement
காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத் துறை மாநில ஒருங்கிணைப்பாளா் ஜவஹா்அலி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் விஜயபாஸ்கா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.