முகப்பு
ஈரோடு

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 நவம்பர், 2022 at 4:37 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் உப இயக்க திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் 3 கட்டங்களாக உழவு இயந்திரம், ரோட்டாவேட்டா், பவா் டில்லா், களை எடுக்கும் கருவி, கதிரடிக்கும் இயந்திரம், தென்னை மட்டை துகளாக்கும் இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.

Advertisement

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் வருவாய் ஆவணங்களை சமா்ப்பித்து வேளாண் இயந்திரங்களை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக ரூ.45 லட்சத்து 28 ஆயிரம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட 44 கிராமங்களுக்கு வேளாண் பணிகளுக்கான இயந்திரங்கள் வாங்க 80 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் இதர கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பங்களை உதவி செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை, கருங்கவுண்டன்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், ஈரோடு 638112 மற்றும் உதவி செயற்பொறியாளா் வேளாண் பொறியியல் துறை, தெற்கு பூங்கா வீதி, கோபி 638452 ஆகிய அலுவலகங்களில் மூலம் பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் மானியம்பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2904843, 04285-290069 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.