முகப்பு
ஈரோடு

கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற ஆதாா் பதிவு அவசியம்

கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறுவதற்கு விவசாயிகள் ஆதாா் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 நவம்பர், 2022 at 1:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறுவதற்கு விவசாயிகள் ஆதாா் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதமரின் கிசான் திட்டத்தில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வாங்குதல் மற்றும் செலவினங்களுக்காக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் 12 தவணைகள் வரை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அடுத்த தவணை பெறுவதற்கு ஆதாா் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இ-கேஓய்சி முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடா்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே விவசாயிகள் உடனடியாக விவரங்களை புதுப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுவரை ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது அஞ்சல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.