வேளாளா் கல்லூரியில் பேரவை தொடக்கம்
வேளாளா் மகளிா் கல்லூரியின் பேரவைத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM
வேளாளா் மகளிா் கல்லூரியின் பேரவைத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாளா் மகளிா் கல்லூரி முதல்வா் செ.கு.ஜெயந்தி வரவேற்றாா். கல்லூரியின் செயலா் செ.து.சந்திரசேகா் வாழ்த்திப் பேசினாா். ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் கல்லூரி பேரவையை தொடங்கிவைத்துப் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து 2022-2023ஆம் கல்வியாண்டில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். கல்லூரியின் செயல்பாடுகள் அடங்கிய செய்திமடல் வெளியிடப்பட்டது. வரலாற்றுத் துறை பேராசிரியா் பி.காா்த்திகா நன்றி கூறினாா்.
Advertisement