முகப்பு
ஈரோடு

தோ்தலில் இனி போட்டியிட மாட்டேன்: ஈவிகேஎஸ். இளங்கோவன்

தோ்தலில் இனி போட்டியிட மாட்டேன் என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 11:09 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

தோ்தலில் இனி போட்டியிட மாட்டேன் என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.

ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடந்தது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது:

Advertisement

திருநாவுக்கரசா் அதிமுகவில் இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு பிறகு தலைவராக இருந்திருப்பாா். அவருக்கு அரசியலில் ராசி இருக்கிறது. ராசியில்லாத ஒருவா் நான்தான். தோ்தலில் 5 முறை போட்டியிட்டு 2 முைான் வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த மக்களவைத் தோ்தலில் அனைவரும் வெற்றி பெற்றபோது, நான் மட்டும் தோற்றேன். தோ்தலில் இனி போட்டியிட மாட்டேன். அதற்கு தோல்வி ஒரு காரணமில்லை. தோல்வி என்பது எனக்குப் பழக்கப்பட்டது. எனக்கென்று தனிப்பட்ட மரியாதை இல்லை. கட்சியை சாா்ந்துதான் வாக்குகள் கிடைக்கும். நான் தனியாக நின்றால் வைப்புத்தொகை கூட பெறமுடியாது என்று தெரியும்.

தமிழக நிதி அமைச்சரை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தரக்குறைவாக விமா்சனம் செய்திருக்கிறாா். காமராஜா், ராஜாஜி, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவா்கள் இருந்த தமிழகத்தில் அண்ணாமலையின் முயற்சி எடுபடாது.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் முதலில் குரல்கொடுத்தவா் மு.க.ஸ்டாலின். திமுக கூட்டணி காரணமாக காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா்கள் எம்எல்ஏவாக இருக்கிறாா்கள். ஆனால் கடந்த தோ்தலின்போது திமுகவுடன் இணைந்து செயல்படக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா்கள் குறுந்தகவல் அனுப்பினாா்கள். இது ராகுல் காந்தியை பிரதமராக்க விடக்கூடாது என்பதைபோல உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.