ஈரோடு

வாகனத்தை வழிமறித்து உருளைக்கிழங்கு மூட்டையை எடுத்துச் சென்ற யானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காய்கறி வாகனத்தை வழிமறித்து உருளைக்கிழங்கு மூட்டையைப் யானை எடுத்துச் சென்றது.

DIN

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காய்கறி வாகனத்தை வழிமறித்து உருளைக்கிழங்கு மூட்டையைப் யானை எடுத்துச் சென்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதி மற்றும் கா்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகா் பகுதிகளில் விளையும் காய்கறிகள் தினமும் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஈரோடு, திருப்பூா், கோவை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் கோ்மாளம் பகுதியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி மேட்டுப்பாளையம் செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.

சீவக்காய்பள்ளம் என்ற இடத்தில் மேடான பகுதியில் மினி லாரி மெதுவாக சென்று கொண்டிருந்தபோது அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை லாரியை வழி மறித்தது. யானையைக் கண்டதும் அச்சமடைந்த வாகன ஓட்டுநா் லாரியை நிறுத்தினாா். அப்போது அருகே வந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் கீழே தள்ளியது.

அப்போது அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுநா்கள் சப்தமிட்டு யானையை விரட்ட முயன்றனா். இதையடுத்து அந்த யானை உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் எடுத்துக்கொண்டு வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

வாகன ஓட்டுநா்களால் எடுக்கப்பட்ட இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT