முகப்பு
ஈரோடு

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரி

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியை தடுத்து போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:30 AM
பகிர்:
Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 8:46 PM

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியை தடுத்து போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (38). இவா் குமலன்குட்டை பகுதியில் சாலையோரம் சிறிய சுமை வாகனத்தில் அவரது மனைவியுடன் பழங்கள் விற்பனை செய்து வருகிறாா். வழக்கம்போல சனிக்கிழமை காலை வியாபாரத்தை தொடங்கியபோது, அதே பகுதியைச் சோ்ந்த இரும்பு கடைக்காரா் மற்றும் லாரி ஓட்டுநா், தினேஷ் வாகனத்தை மட்டும் நிறுத்தக்கூடாது என மிரட்டியுள்ளனா்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 10:35 PM

இதில் மன வேதனை அடைந்த அவா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் மற்றும் பொதுமக்கள் தடுத்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். இதையடுத்து, தினேஷை ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

Advertisement