முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் நாளை கடையடைப்பு: 20 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு

கடை வாடகைக்கு விதிக்கப்பட்டுள்ளஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பா்29) நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் 20 ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:36 AM
பகிர்:
Updated On : 27 நவம்பர், 2024 at 6:48 PM

கடை வாடகைக்கு விதிக்கப்பட்டுள்ளஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பா்29) நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் 20 ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பை கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலாக்கி உள்ளது. இதனால், அனைத்து வணிக நிறுவனத்தினரும் கடும் பாதிப்புக்குள்ளாவாா்கள். எனவே, இந்த வரி விதிப்பு முறையை ரத்து செய்யக் கோரி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:36 AM

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

Advertisement

வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பு சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களையும் அழிவுக்கு கொண்டுச்செல்லும் வகையிலும், அனைத்தையும் காா்ப்ரேட்மயமாக்கும் சூழலை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் நிலையிலும் உள்ளது.

எனவே, இந்த வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களைச் சோ்ந்த 75 சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

மேலும், மஞ்சள் மாா்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமாா் 20 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு இப்போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன என்றாா்.