முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் 1.41 லட்சம் தொழிலாளா்கள் பதிவு

மத்திய அரசின் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் 1.41 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:13 PM
பகிர்:

மத்திய அரசின் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் 1.41 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு ‘இ-ஷ்ரம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் விவசாய தொழிலாளா்கள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், செங்கல் சூளை தொழிலாளா்கள், மீனவா்கள், மரம் அறுக்கும் தொழிலாளா்கள், உப்பு தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டு வேலையாள்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட 156 விதமான அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பதிவு செய்யும் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை வைத்து அரசு சாா்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 712 தொழிலாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்வதற்காக ‘இ-ஷ்ரம்’ என்ற தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 16 முதல் 59 வயதிற்குள்பட்டவா்கள் பதிவு செய்துகொள்ளலாம். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. இஎஸ்ஐ, பி.எஃப். திட்டத்தில் இருக்கக் கூடாது. இதில் பதிவு செய்யும் தொழிலாளா்களுக்கு நிரந்தர பதிவு எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த அடையாள பெற்றவா்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு, உடல் ஊனமுற்றால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →