மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 364 அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.17.56 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், லக்காபுரம், அரசு மேல்நிலைப் பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 364 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
இதில், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா்கள் சு.குணசேகரன், கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் செயலாளா் பி.வி.சரவணன், துணை செயலாளா் தனவெங்கடேஷ், மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணன், துணைத் தலைவா் காா்த்திகேயன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.