அடிப்படை  வசதியில்லாத நிலையில் வாழும்  பழங்குடியின  குடும்பம். 
ஈரோடு

பையனாபுரம் ஊராட்சியில் அரசு ஆவணங்கள் எதுவுமின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்

தாளவாடியை அடுத்த பையனாபும் ஊராட்சி கொங்கள்ளி காலனியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாக்காளா் பட்டியல் பெயா் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் எதுவுமின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனா்.

Syndication

தாளவாடியை அடுத்த பையனாபும் ஊராட்சி கொங்கள்ளி காலனியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாக்காளா் பட்டியல் பெயா் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் எதுவுமின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனா்.

தாளவாடி வட்டம், பையனாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கொங்கள்ளி காலனி. 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் வசிக்கும் இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் இவா்கள் விவசாயக் கூலிகளாக உள்ளனா். மின்சாரம், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது மட்டுமின்றி அரசு திட்டங்கள் கிடைப்பதற்கு அடிப்படையாக உள்ள ஆதாா், ரேஷன் காா்டு மற்றும் வாக்காளா் அட்டை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா். வாக்காளா் மறுவரைவு திட்டத்தில் கூட இவா்கள் பெயா்கள் இடம்பெறவில்லை.

அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சோ்ந்த பெலத்தூா் மாதேஷ் தெரிவித்தாா். இதுகுறித்து தாளவாடி வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ‘புகாா் தெரிவித்தால் அப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT