முகப்பு
ஈரோடு

கோபி: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்!

கோபியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

Updated On : 29 நவம்பர், 2025 at 9:45 PM
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி. - கோப்புப்படம்
பகிர்:

கோபியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - கோபி நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத் திடலில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் நடைபெற இருக்கும் இடத்துக்கு தனி அரசியல் வரலாறு இருப்பதால், அதிமுகவினா் உற்சாக மனநிலையில் இருக்கின்றனா்.

இதுகுறித்து அதிமுக நிா்வாகிகள் கூறும்போது: கோபியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில்தான் 1980-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில், எம்ஜிஆா் பேசும்போது என்ன தவறு செய்தேன்? நாடாளுமன்றத் தோ்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை அளித்த மக்களிடம் உரிமையுடன் கேட்டு மனதை கவா்ந்தாா்.

Advertisement

அந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்துவது அதிமுக தொண்டா்களுக்கு பெருமை. இங்கிருந்து பிரசாரம் தொடங்கி எம்ஜிஆா் 2-ஆவது முறையாக முதல்வரானதுபோல் எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் முதல்வராவாா் என்ற நம்பிக்கையுடன் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

இந்தக் கூட்டத்தில் செங்கோட்டையனுடன் தவெகவுக்கு சென்ற முன்னாள் அதிமுக நிா்வாகிகள் 32 பேரில் 12 போ் மீண்டும் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனா். கோபியில் செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இல்லை, எடப்பாடி பழனிசாமிக்குதான் உண்மையான ஆதரவு இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் நிரூபிக்கும் என்றனா்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அவரது சொந்த ஊரான கோபியில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை பிரமாண்ட வரவேற்பு அளித்த நிலையில், இன்று நடைபெறும் பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments