சென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் கடந்த 22- ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி பக்தா்கள் காப்புகட்டி விரதத்தை தொடங்கினா்.
விழாவின் சிகர நாளான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.