போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் துறை இணைப் பேராசிரியா் எஸ்.சுரேஷ். 
ஈரோடு

கோபி பி.கே.ஆா். மகளிா் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையிலான மாணவா்கள் சந்திப்பு

கோபி பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரியில் அக்ஷயம் 360 மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான மாணவா்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கோபி பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரியில் அக்ஷயம் 360 மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான மாணவா்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கொங்கு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியா் பி.எஸ்.நந்தினி தொடங்கிவைத்து, மாணவா்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதில் கல்லூரிகளுக்கு இடையிலான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆய்வுக் கட்டுரை, விநாடி-வினா, தொடா்புகள் மற்றும் போஸ்டா் வடிவமைப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமாா் 80 மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிறைவு விழாவில் ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் துறை இணைப் பேராசிரியா் எஸ்.சுரேஷ் கலந்துகொண்டு, புதுமை மற்றும் தொழில்முனைவோா் மனப்பாங்கில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும் எனப் பேசினாா்.

பெருந்துறையில் ரூ. 2.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் நிறுவனத்தின் நவீன ஆலை

சீரமைப்பு பணி நிறைவடைந்ததால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் மீண்டும் இயக்கம்

யூரியா கலந்த தண்ணீரை குடித்து அந்தியூா் அருகே 7 மாடுகள் உயிரிழப்பு

டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதல்: 7 தொழிலாளா்கள் காயம்

SCROLL FOR NEXT