பந்தலூரில் காட்டுப் பன்றி தாக்கி பெண் காயம்
பந்தலூரில் காட்டுப் பன்றி தாக்கியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் படுகாயமடைந்தார்.
பந்தலூரில் காட்டுப் பன்றி தாக்கியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் படுகாயமடைந்தார்.
பந்தலூரில் கடைவீதிப் பகுதியில் வசிப்பவர் பஷீர். இவரது மனைவி ஜெமீனா(48). இவர் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென காட்டுப் பன்றித் தாக்கியதால் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவருக்கு கை எலும்பு முறிந்தது. உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி மருத்துவமனைக்குச் சென்று இந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.