முகப்பு
நீலகிரி

அழிந்து வரும் அரியவகை மருத்துவ குணமிக்க பழங்கள்: பரவலாக விளைவிக்க வலியுறுத்தல்

குன்னூரில் நடைபெற்ற  60 ஆவது பழக் கண்காட்சியில் காட்சிப் பொருளாக மட்டுமே காணப்படும் அழிந்து வரும் அரியவகை மருத்துவ குணமிக்க

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:09 PM
பகிர்:

குன்னூரில் நடைபெற்ற  60 ஆவது பழக் கண்காட்சியில் காட்சிப் பொருளாக மட்டுமே காணப்படும் அழிந்து வரும் அரியவகை மருத்துவ குணமிக்க பழங்களை பரவலாக  விளைவிக்க தோட்டக்கலைத் துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களும்,  சுற்றுலாப்  பயணிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
குன்னூர் சிம்ஸ்  பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் பழக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நீலகிரியின் தட்ப வெப்பநிலையில் விளையும்  மருத்துவ குணமிக்க பழவகைகளைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
சிம்ஸ் பூங்காவில் 1958 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் பழக் கண்காட்சியில் மருத்துவ  குணமிக்க  முள்சீத்தா, மங்குஸ்தான், துரியன் பழங்கள், தவிட்டுப் பழம், ஊசிகலா, டமிட்டா,  தாட்பூட் உள்ளிட்ட பல்வேறு  வகையானபழங்கள் இந்த ஆண்டு நடைபெற்ற பழக் கண்காட்சியில்  சொற்ப அளவிலேயே காட்சிப்படுத்தப்பட்டன.
இது குறித்து பழக் கண்காட்சியில் பங்கேற்ற வியாபாரிகள், தோட்ட உரிமையாளர்கள் கூறுகையில், "அழிந்து வரும் நிலையில் உள்ள மருத்துவ குணமிக்க பழங்களை விளைவிக்கும் விவசாயத்தைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இனி வரும் காலங்களில் மருத்துவ குணமிக்க  பழங்களை கண்காட்சியில் காண்பதுகூட  அரிதாகிவிடும்' என்றனர்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜ கோபால் கேட்டபோது, "அண்மைக் காலமாக குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் தொல்லையால் அறியவகை பழங்களைச் சாகுபடி செய்வது குறைந்து விட்டது. எனவே, வீட்டுத் தோட்டங்களை அமைக்கவும்,  பழத்தோட்ட விவசாயிகளுக்கு அறிவகை பழ நாற்றுகளை உற்பத்தி செய்து மிகக் குறைந்த விலையில் வழங்கவும், 60 ஹெக்டேர் பரப்பளவில் கமலா ஆரஞ்சு வளர்க்க விவசாயிகளுக்கு  உதவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், வயிற்று வலி உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் பேஷன் புரூட், மங்குஸ்தான் போன்ற பழங்களை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க  ஊக்குவித்து வருகிறோம். விக்கிப்பழம்,  ஊசிகலா, தவிட்டுப் பழம் உள்ளிட்டவற்றை வனப் பகுதிகளில்  வளர்க்க வனத் துறை ஆலோசித்து வருகிறது. வருங்காலத்தில்  தோட்டக் கலை துறை  சார்பில் அரிய வகை பழ நாற்றுகளின் உற்பத்தியை அதிகரித்து அழிந்து வரும் இந்தப் பழவகைகளைக்  காப்பாற்ற  நடவடிக்கை எடுப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments