முகப்பு
நீலகிரி

கடும் குளிரிலும் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு: மாணவ, மாணவிகள் அவதி

குன்னூரில்  கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும்கூட பல பள்ளிகளில் மாலை 5 மணிக்கு மேல் சிறப்பு

Updated On : 24 ஜனவரி 2019, 12:30 am IST
பகிர்:

குன்னூரில்  கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும்கூட பல பள்ளிகளில் மாலை 5 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதால்  மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குன்னூரில் உள்ள சில தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு,  12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வகுப்புக்ந் முடித்து விட்டு நீண்ட தொலைவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத நிலையில், அச்சமயத்தில் வரும் பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவ, மாணவியர் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தற்போது குன்னூரில் சராசரியாக  குறைந்த பட்சமாக  10 டிகிரி  செல்சியஸும் ,அதிகபட்சமாக 17  டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும்  காணப்படுகிறது.  இதனால், மாலை நேரத்தில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. வகுப்பறைகளிலும்  குளிர் நிலகிறது. இத்தகைய நிலையில் பல பள்ளிகளில் மாலை 6 மணி வரையும், சில பள்ளிகளில் இரவு 7 மணி வரையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகத் தெரிகிறது. எனவே, குன்னூரில் கடும் பனி குறையும் வரை பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.