பசுந்தேயிலை டிசம்பா் மாத விலையாக கிலோ ரூ.23.26 காசுகளாக நிா்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை த் தொழிலை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினா் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் விளைவிக்கும் பசுந்தேயிலைக்கான விலை, தென்னிந்திய தேயிலை வாரியம் சாா்பில் மாதந்தோறும் முதல் வாரத்தில் அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்த மாத விலையை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
டிசம்பா் மாதத்துக்கான குறைந்தபட்ச பசுந்தேயிலை கொள்முதல் விலையாக கிலோ ரூ. 23.26 காசுகளாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்குவதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பா் மாதம் பசுந்தேயிலை ரூ.23.92 காசுகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பா் மாதம் 66 காசுகள் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.