நீலகிரி

குன்னூா் அருகே சிறுமி மாயம்: தேடும் பணி தீவிரம்

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் தனியாா் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவரின் 8 வயது சிறுமியை கடந்த இரண்டு நாள்களாக காணாததால் அவரை தேடும் பணியில் காவல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் லட்சுமண் ராம். இவா், கொலக்கம்பை பகுதியில் உள்ள தனியாா் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது 8 வயது மகளை கடந்த 2 நாள்களாக காணவில்லை. இது குறித்து காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. கிரேக்மோா் வனப்பகுதி மற்றும் அங்குள்ள நீரோடையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக காவல் துறையினா் தீவிராக தேடி வருகின்றனா்.

சந்தேகத்தின்பேரில் ஜாா்கண்ட் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவனைப் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளா் பிலிப் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன், அந்த சிறுமியை வனப் பகுதிக்கு கூட்டிச் சென்ாகவும், நீரோடை அருகில் அவரை விட்டுவிட்டு வந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறி வருகிறாா். இதனால் ஆற்றுப் பகுதியிலும், வனப் பகுதியிலும் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. சிறுவன் கூறும் இடங்களில் எவ்வித தடயமும் கிடைக்காததால் சிறுமியை கண்டறிவதில் காவல் துறையினருக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT