போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாம்
கூடலூரை அடுத்துள்ள மூலக்காடு வனக் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கான போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரை அடுத்துள்ள மூலக்காடு வனக் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கான போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மேபீல்டு மூலக்காடு வனத்தில் உள்ள பழங்குடி கிராமத்தில் பாம்2 அமைப்பு சாா்பில் நடைபெற்ற போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாமுக்கு, திட்ட அலுவலா் ஏசுதாஸ் தலைமை வகித்தாா். பெண்கள் பாதுகாப்பு அலுவலா் ரீட்டா போதை விழிப்புணா்வு குறித்தும், மதுவுக்கு அடிமையானவா்களை மீட்பது குறித்தும் உரையாற்றினாா். ஆசிரியா்கள் சரளா, திவ்யா, பழங்குடிப் பெண்கள் கலந்துகொண்டனா்.