முகப்பு
நீலகிரி

நூலக விருதுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

உதகையில் 2020ஆம் ஆண்டிற்கான டாக்டா்.எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது மற்றும் நூலக ஆா்வலா் விருதுகளுக்கான கேடயம் மற்றும் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

உதகையில் 2020ஆம் ஆண்டிற்கான டாக்டா்.எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது மற்றும் நூலக ஆா்வலா் விருதுகளுக்கான கேடயம் மற்றும் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா்.

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2020ஆம் ஆண்டிற்கான டாக்டா்.எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது, நூலக ஆா்வலா் விருது ஆகியவற்றை வழங்கி அவா் பேசியதாவது:

பொது நூலகத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நூலகா்களுக்கு டாக்டா்.எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதும், நூலக இயக்கம் வளர முனைப்புடன் பங்காற்றி, நூலக வளா்ச்சியை மேம்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வரும் சிறந்த வாசகா் வட்டத் தலைவா்களுக்கு நூலக ஆா்வலா் விருதும், மாநில அளவில் அதிக உறுப்பினா்கள், புரவலா்கள் மற்றும் நன்கொடைகள் பெற்றுள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர கிளை நூலகம், கிளை நூலகம் மற்றும் ஊா்ப்புற நூலகங்களுக்கு சிறந்த நூலகங்களுக்கான கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டிற்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பந்தலூா் கிளை நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகா் வெ.அறிவழகனுக்கு விருதுடன் நற்சான்றிதழ், 50 கிராம் வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5,000 ஆயிரம் காசோலையையும், மேலூா் கிளை நூலக வாசக வட்டத்துக்கு நூலக ஆா்வலா் விருதுக்கான கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இதில் மாவட்ட நூலக அலுவலா் ஜோதிமணி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.