முகப்பு
நீலகிரி

குன்னூரில் கடும் பனி மூட்டம்: அரசுப் பேருந்துகள் மோதி விபத்து

குன்னூரில் கடும் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதை வளைவில் எதிரே வாகனம் வருவது தெரியாத நிலையில்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
விபத்தில் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நிற்கும் பேருந்து.
பகிர்:

குன்னூரில் கடும் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதை வளைவில் எதிரே வாகனம் வருவது தெரியாத நிலையில், இரண்டு அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டன. இதில் இரு பேருந்துகளிலும் இருந்த 101 பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிக அளவில் உள்ளது. மேக மூட்டம்போல காட்சியளிப்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி செல்கின்றன. இருந்தாலும் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் சரியாகத் தெரிவதில்லை.

குன்னூரில் இருந்து கோத்தகிரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், கோத்தகிரியில் இருந்து குன்னூா் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மேல் குன்னூா் பகுதியில் மலைப் பாதையில் வளைவில் வந்தபோது மோதிக்கொண்டன.

இதில் குன்னூா் நோக்கி வந்த பேருந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்தது. இடது புறம் மரம் இருந்ததால்  அதில் மோதி நின்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் விழாமல் தப்பியது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இந்தப் பேருந்தில் வந்த 61 பயணிகள், எதிரே வந்த பேருந்தில் இருந்த 40 பயணிகள் என 101 பயணிகள்  அதிா்ஷ்டவசமாக  உயிா் தப்பினா்.

குன்னூரில் கடந்த நான்கு நாள்களாக காணப்படும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →