முகப்பு
நீலகிரி

அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா் தொடா்பு கொள்ளலாம்: ஆட்சியா் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்க விவரம் பெறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கொவைட்-19 நிவாரண நிதியுதவித் தொகை பெற அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவா்களுக்கு அடையாள அட்டை பெற்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவா்கள் உதகையில் பிங்கா்போஸ்டில் உள்ள மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.