நீலகிரி

காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டம்

DIN

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாடந்தொரை அதன் சுற்றுப்புற கிராமங்களில் தினமும் காட்டு யானைகள் வீடுகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் பாடந்தொரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகளை வரவழைத்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT