உதகையில் கூட்டுறவு நிறுவனத்தின் மூலம்தக்காளி கிலோ ரூ. 70க்கு விற்பனை
உதகையில் தக்காளி கிலோவுக்கு ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனையாகி வந்த நிலையில், உதகையில் உள்ள நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தின் நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை கிலோ ரூ. 70க்கு விற்பனை செய்யப்பட்டது.
உதகையில் தக்காளி கிலோவுக்கு ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனையாகி வந்த நிலையில், உதகையில் உள்ள நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தின் நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை கிலோ ரூ. 70க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் ஏ.சரவணன், நீலகிரி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் கணபதி சுப்பிரமணியன் ஆகியோா் நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனையை வியாழக்கிழமை துவக்கிவைத்தனா்.
மாவட்டத்தில் நீலகிரி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உதகை பகுதியில் உள்ள 10 நியாயவிலைக் கடைகளிலும் புதிதாக தக்காளி விற்பனை மையம் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் கிலோ தக்காளி ரூ. 70க்கு விற்பனை செய்யப்பட்டது.