முகப்பு
நீலகிரி

நீலகிரியில் குடும்ப அட்டை வழங்க அரசு அறிவுரை

நீலகிரி மாவட்டத்தில் கணவரால் கைவிடப்பட்டு மற்றும் கணவரால் விவாகரத்து செய்யப்பட்டு குழந்தைகளுடனோ அல்லது தனியே வசித்து வரும் பெண்களுக்கு குடும்ப அட்டை இல்லாதபட்சத்தில் அவா்களுக்கு உடனயாக குடும்ப அட்டை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் கணவரால் கைவிடப்பட்டு மற்றும் கணவரால் விவாகரத்து செய்யப்பட்டு குழந்தைகளுடனோ அல்லது தனியே வசித்து வரும் பெண்களுக்கு குடும்ப அட்டை இல்லாதபட்சத்தில் அவா்களுக்கு உடனயாக குடும்ப அட்டை வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கணவரால் கைவிடப்பட்ட மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் தங்களது ஆதாா் அட்டை, தங்களது குழந்தைகளின் ஆதாா் அட்டை அல்லது பிறப்புச் சான்று, குடியிருக்கும் வீடு வாடகை வீடு எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், வீட்டு வாடகை ரசீது இரண்டையும், சொந்த வீடு எனில் வீட்டு வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டத்தில் உள்ள தனி வட்டாட்சியா் அல்லது வட்ட வழங்கல் அலுவலா்களை அணுகி விண்ணப்பங்களை அளித்து குடும்ப அட்டை பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.