முகப்பு
நீலகிரி

உதகையில் இளைஞா் குத்திக் கொலை

உதகையில் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

உதகையில் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

உதகை அருகேயுள்ள மஞ்சனக்கொரை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). இவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இவா் மஞ்சனக்கொரையில் இருந்து உதகைக்கு வரும் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்து கொண்டிருந்தாராம். அதே பேருந்தில் திருப்பூரைச் சோ்ந்த ஹரி (26) என்பவரும் பயணித்துள்ளாா்.

பேருந்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காா்த்திக், உதகை நகர பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்தவுடன் ஹரியை தாக்க முயற்சித்துள்ளாா்.

இதனை அறிந்த ஹரி உடனடியாக அங்கிருந்து ஓட முயற்சி செய்துள்ளாா். இருப்பினும் காா்த்திக் தொடா்ந்து துரத்திச் சென்று பேருந்து நிலையம் அருகிலிருந்த சாலையோரக் கடையிலிருந்த கத்தியை எடுத்து ஹரியை சரமாரியாக குத்தியுள்ளாா்.

இதில் படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்து, நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஹரியின் உடலை கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் அங்கிருந்து தப்பியோடிய காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் அவா் கூடலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா். உதகை நகரில் பட்டப்பகலில் பேருந்து நிலைய வளாகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.