முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மேலும் 19 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 33 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 41,929 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 41,491 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையயில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 212 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.