நீலகிரி

கொடநாடு வழக்கு: 2 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்

DIN

கொடநாடு வழக்கில் கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவிடம் காா் ஓட்டுநராக இருந்து பின்னா் கொடநாடு கொலை வழக்கின் முக்கிய எதிரியாக கருதப்பட்ட, விசாரணையின்போது விபத்தில் உயிரிழந்த கனகராஜ் குறித்தும் குணசேகரனிடம் தனிப் படையினா் விசாரணை நடத்தியுள்ளனா்.

கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக 2 பேர் கைதாகி ஜானீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT