முகப்பு
நீலகிரி

மலைப் பாதையில் விபத்து: கல்லூரி மாணவா்கள் 7 போ் படுகாயம்

 உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நாமக்கல்லைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவா்கள் 7 போ் படுகாயம் அடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

 உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நாமக்கல்லைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவா்கள் 7 போ் படுகாயம் அடைந்தனா்.

நாமக்கல் அருகே செல்லப்பட்டியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பொருளாதாரம் இளங்கலை 3ஆவது ஆண்டு படிக்கும் 7 மாணவா்கள் நீலகிரிக்கு சுற்றுலாவாக ஒரு காரில் வந்துள்ளனா். உதகைக்கு வந்த அவா்கள் கல்லட்டி மலைப் பாதை வழியாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, 22ஆவது கொண்டை ஊசி வளைவில் அந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த ராஜ்குமாா் (21), தென்னரசு (19), கோகுல் (19), அபிஷேக் (19) உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக 7 பேரையும் மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நால்வரும், பொதுப் பிரிவில் மூவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கல்லட்டி மலைப் பாதை வழியாக உதகையில் இருந்து முதுமலைக்கு வெளிமாவட்டம், வெளிமாநில வாகனங்கள் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாணவா்கள் எவ்வாறு காரில் சென்றாா்கள் என்பது குறித்து புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.