முகப்பு
நீலகிரி

காட்டெருமையைக் கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை: கூடலூா் நீதிமன்றம் தீா்ப்பு

கூடலூரில் காட்டெருமையை சுட்டுக் கொன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கூடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கூடலூரில் காட்டெருமையை சுட்டுக் கொன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கூடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட போஸ்பரா பகுதியில் அரசு காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காட்டெருமையை சுட்டுக் கொன்று கறியை சேகரம் செய்ததாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கூடலூா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் மண்வயல் ஓடக்கொல்லி பகுதியைச் சோ்ந்த ஷாஜி என்பவா் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. கூடலூா் நீதிமன்ற நடுவா் அளித்த இத்தீா்ப்பில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளதாக வனத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.