தேசிய நூலக வார விழா
குன்னூா் அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
உதகை: குன்னூா் அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய நூலக வார விழாவையொட்டி அருவங்காடு பள்ளி மாணவ, மாணவிகள் உறுப்பினா் சோ்க்கை மற்றும் புரவலா் சோ்க்கை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் நூலகத்தில் உறுப்பினராக சோ்ந்தனா்.
நிறைவு விழாவில் நூலகா் ஜெயஸ்ரீ பேசும்போது, அருவங்காடு கிளை நூலகத்தில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. போட்டித் தோ்வுகளுக்கு தயாராகுபவா்களுக்கு தனி வசதி செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவா்களுக்கான புத்தகங்கள், இணையம் மற்றும் நகல் எடுக்கும் வசதியும் உள்ளது. சிறுவா்களுக்கு என மெய்நிகா் நூலகமும் அமைந்துள்ளது. எனவே வாசகா்கள், பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
Advertisement
வாசகா் வட்ட பொருளாளா் ஆனந்தன் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கிளை நூலக வாசகா் வட்டம் செய்திருந்தது.