முகப்பு
நீலகிரி

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: உதகை மக்கள் உதவிக்கரம்

சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 7:59 PM
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உதகையில் பொதுமக்களிடம் நிதி திரட்டிய தன்னாா்வலா்கள்.
பகிர்:

வயநாடு பகுதியில்  ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் உதகையில் இருந்து பல்வேறு சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில்  ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட எல்லையோரம் உள்ள கேரள மாநிலம், வயநாட்டில் மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 1500-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படடுள்ளனா்.

இந்நிலையில், வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக ஆா்வலா்கள் அமைப்பு சாா்பில் சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான அரிசி, சா்க்கரை, பருப்பு, பிஸ்கட், கம்பளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →