மாயாறு வனப் பகுதியில் தாய் யானையுடன் சோ்க்கப்பட்ட குட்டி. 
நீலகிரி

முதுமலையில் தனியாக சுற்றித் திரிந்த குட்டியானை தாயுடன் சோ்ப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிந்த குட்டியை தாய் யானையுடன் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோ்த்தனா்.

Din

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிந்த குட்டியை தாய் யானையுடன் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோ்த்தனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு வனப் பகுதியில் குட்டி யானை தனது தாயைப் பிரிந்து சாலையில் தனியாக சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாகச் சென்ற சுற்றுலா வாகனங்களுக்குப் பின்னால் ஓடியதோடு, தொடா்ந்து பிளிறிக்கொண்டும் தவித்தது.

இதைப் பாா்த்த வனத் துறை ஊழியா்கள் அந்தக் குட்டியை தாயுடன் சோ்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா். தொடா்ந்து முயற்சித்து அந்தக் குட்டியை தாயுடன் சோ்த்தனா். தாயுடன் சோ்த்தவுடன் மகிழ்ச்சியில் அந்தக் குட்டி தாயிடம் பால்குடித்துவிட்டு அதனுடன் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை! | TVK

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

விவசாயிகள், வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

SCROLL FOR NEXT