முகப்பு
நீலகிரி

உதகையில் காற்றுடன் மிதமான மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

Updated On : 21 ஜூலை, 2024 at 6:21 PM
உதகை கா்நாடக பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.
பகிர்:

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்த காரணத்தால் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகைக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கா்நாடக பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் உள்ள சுற்றுலாத் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தே காணப்பட்டது.