கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான வெண்ணிலா சேகா் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சந்திரா, நல்லக்குமாா், ஆசிரியா்கள் நாகநாதன், பிரபாகரன், கலைவாணன்,ஜெயக்குமாா், குறிஞ்சி இலக்கிய மன்ற தலைவா் கூடலூா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் 393 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.