கூடலூா்: கூடலூா் அருகே அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு மலேசியாவில் பொறியல் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மாணவியாக தோ்வான க.பிரேமா, மேல்நிலைப் பள்ளி படிப்பை குன்னூா் மாதிரி பள்ளியில் படித்தாா். இந்நிலையில், வெளிநாட்டில் படிப்பதற்காக நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்று, மலேசியாவிலுள்ள அல் புகாரி இண்டா்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன்.ஜெயசீலன் கலந்துகொண்டு மாணவியை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கினாா்.
நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் விஜயகுமாா், கல்லூரி பேராசிரியா்கள் அா்ஜுன், மகேஸ்வரன், தலைமை ஆசிரியா் சங்கா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுபாஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.